வணக்கம்.
விளக்கணிவிழா வருகிறது.அனைவரும் புத்தாடை எடுப்பர்.வெடிவாங்கி
வெடிப்பர்.ஊருக்குப்போவர்.இவற்றைச்செய்ய நாங்கள் விரும்பவில்லை.
ஏனெனில் இது தமிழர் திருநாள் இல்லையாம்.அப்பா சொன்னார்கள்.எனவே
பொங்கல்திருவிழாவைச்சிறப்பாகக் கொண்டாட உள்ளோம்.ஒரு வருத்தம் ஏற்படுகிறது.சென்ற விளக்கணி விழாவின்பொழுது என் அருமைத் தாத்தா
இருந்தார்கள்.என்னைத் தூக்கிக் கொஞ்சினார்கள்.இந்த விளக்கணி விழா
எங்கள் தாத்தா இல்லாமல் வருகிறது.
அன்புள்ள
இ.தமிழ்க்குடிமகன்
Tuesday, October 30, 2007
Wednesday, September 12, 2007
தமிழ்க்குடிமகன் பேசுகிறேன்...
என் பெயர் இ.தமிழ்க்குடிமகன்.
எனக்கு அகவை மூன்று முடிய உள்ளது(செப்டம்பர் 18 பிறப்பு).
திருக்குறள் நான்கு அதிகாரம் சொல்வேன்.
குறும்பு செய்வதில் வல்லவன்.
பல பொருள்களை உடைத்துள்ளேன்.
அப்பாவின் பிறந்த ஊருக்குச் செல்வதில் ஆவல் மிகுதி.
ஆயாவுடன் விளையாடுவதில் மிகுந்த விருப்பம்.
தாத்தா சாமியாகப் போனபிறகு படத்தில் மட்டும் பார்க்கிறேன்.
அப்பா உதவியோடு அடிக்கடி எழுதுவேன்.
அன்புச்சிறுவன்

Subscribe to:
Posts (Atom)